ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 11 பேர் கைது

பெங்களூர், டிச.12-
ரவுடி கும்பலுக்கு மிரட்டலாக இருந்து வந்தவரை கொலை செய்ய இலக்கு நிர்ணயித்து அவரின் நண்பரான ஆட்டோ டிரைவரை கொலை செய்த சம்பவத்தில் போலீசார் 11 பேரை கைது செய்தனர்.
இச்சம்பவம் பற்றி தெரிய வந்திருப்பதாவது:பனசங்கரில் உள்ள நியூ டிம்பர் யார்ட் லே- அவுட்டை சேர்ந்தவர் அருண் (24) டிசம்பர் 5ம் தேதி இரவு 10:30 மணிக்கு டெலிகாம் காலனி அருகே மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, நான்கு பேர் அவரை வழிமறித்து தாக்கி படுகொலை செய்துள்ளனர்.
இது தொடர்பாக பையட்ரான புரா போலீசார் இதுவரை 11 பேரை கைது செய்துள்ளனர்.
ஜனதா காலனியில் வசிக்கும் அருணின் நண்பர் அஜய் தான் இந்த கொலைகாரர்களுக்கு இலக்காக இருந்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
ஜனதா காலனி மற்றும் ஜே .ஜே. நகர், பகுதிகளில் அருணின் நண்பர் அஜயின் எதிர்ப்பு கும்பலுக்கு, மிரட்டலாக இருந்துள்ளார். இதனால் ஹரிஷ் ,மது ,வசந்த், உள்ளிட்ட போட்டி கும்பல்கள் அஜயை கொல்ல திட்டமிட்டனர். கடந்த டிசம்பர் 4 ம் தேதி அஜய் கும்பலுடன் நெருக்கமாக இருந்த அவரின் நண்பர் அருண், அப்பு ஆகியோர் ஒன்றாக இருந்ததை எதிர்ப்பு கோஷ்டி பார்த்துள்ளது.மறுநாள் ஜே .ஜே. நகரின் கல்லறை அருகே கும்பலுடன் இருந்த அப்பு பிரிந்து சென்றார் .அருண் மற்றும் அஜயை ஒன்றாக பார்த்ததாக தெரியவந்தது.
குடிபோதையில் 5 பேர் கொண்ட கும்பல் டிசம்பர் 5ம் தேதி அஜயை கண்டுபிடிக்க அருணை சந்தித்தனர். இருக்கும் இடத்தை கேட்டனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் அருணை அவர்கள் கொலை செய்தார்கள். அஜயை தேடி வந்த ஐந்து பேர் தான் அருணை கொலை செய்ததாக போலீசார் தரப்பில் கூறுகின்றனர்.கொலை செய்தவர்கள் தப்பிவிட்டனர். ஆனால் சிசிடிவி கேமரா காட்சிகளின் ஆதாரமாகக் கொண்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்த வழக்கில் ஹரிஷ், மது ,வசந்த், அப்பு என்ற பிரசாந்த் மற்றும் ஏழு பேர் இந்த வழக்கில் உள்ளனர். இது சிக்கலான வழக்காக இருப்பதால் இதனை கெங்கேரி கேட் ஏசிபி விசாரணை நடத்தி வருகிறார்.