ஆட்டோ டிரைவர் படுகொலை

கார்வார் : டிசம்பர் : 1 – இரண்டு இளைஞர்கள் இடையே ஏற்பட்ட பகை கொலை செய்யும் அளவிற்கு திரும்பியுள்ளது .
ஆனால் இந்த சம்பவத்தில் இறந்துபோனவன் அடையாளம் தெரியாத மற்றொரு இளைஞன். இந்த சம்பவம் உத்தர ஹோன்னாவராவின் அரரெயங்கடி அருகில் நடந்துள்ளது.
இந்த கிராமத்தில் வசித்து வந்த இளைஞன் ஒருவன் தன் நண்பனை கொலை செய்ய அவன் ஒட்டி வந்த ஆட்டோ மீது டிராக்டரை ஏற்றியுள்ளான்.
ஆனால் இதில் இறந்து போனது அடையாளம் தெரியாத ஆட்டோ ஓட்டுநர். விநாயகா பட் என்பவனுக்கும் கேசவ நாயகா மற்றும் வசந்த நாயகா அகியோருக்கிடையே பண விஷயமாக தகராறுகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை இரவு கேசவா மற்றும் வசந்த் ஆட்டோ ஒன்றின் அருகில் நின்றிருந்தனர் .
அப்போது அங்கு டிப்பர் வாகனத்தில் வந்து கொண்டிருந்த விநாயகா இவர்கள் மீது வாகனத்தை ஏற்றியுள்ளான். அனால் அப்போது அங்கு ஆட்டோ ஓட்டுநர் ஓல்வின் என்பவனும் இவர்களுடன் இருந்துள்ளான். விநாயகா பட் ஓட்டிவந்த வாகனம் இவர்கள் மூவர் மீதும் மோதியுள்ளது. இதில் மூவரும் பலத்த காயமடைந்த நிலையில் ஓல்வின் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளான் . தேவையற்ற கோவத்தால் அடையாளம் தெரியாத நபரை கொன்ற விநாயக் பட் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.