ஆட்டோ பயணத்தை சுமுகமாக்க க்யூ ஆர் கோட் நடைமுறை

பெங்களூர்: மார்ச். 2 – நகரில் பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர்களை பயன்படுத்தாது வாடிக்கையாளர்களிடம் அதிக அளவில் வசூல் செய்து வருவதை தவிர்க்கவும் , மற்றும் க்யூ வாடிக்கையாளர்களிடம் முரட்டு தனமாக நடந்து கொள்ளலும் ஓட்டுனர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தொல்லைகள் தரும் ஓட்டுனர்கள் குறித்து புகார் அளிக்கும் வசதியாக க்யூ ஆர் கோட்டை நடைமுறைப்படுத்த நகர போக்குவரத்து போலீஸ் முற்பட்டுள்ளது. அடுத்த இரண்டே மாதத்தில் இந்த க்யூ ஆர் கோடை நடைமுறைப்படுத்த போக்குவரத்து போலீஸ் மிகவும் தீவிரமாக உள்ளது. ஆட்டோக்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் குறித்த அடையாள அட்டைக்கு மாறுதலாக இனி க்யூ ஆர் கோடுகளை பொறுத்த போலீஸ் துறை முடிவு செய்துள்ளது. இன்னும் சிலவே நாடகளில் நகரின் அனைத்து ஆட்டோக்களிலும் அடையாள அட்டைக்கு மாற்றாக க்யூ ஆர் கோடை நிறுவ வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.இத்தனை நாட்களாக ஆட்டோக்களில் வெறும் ஆட்டோ ஓட்டுனரின் விவரங்கள் மட்டும் வெளியிடப்பட்டிருந்தது. இந்த க்யூ ஆர் கோட் வாயிலாக ஆட்டோ ஓட்டுனரின் ஓட்டுநர் உரிமை உட்பட அனைத்து விவரங்களும் பதிவாகியிருக்கும். ஆட்டோ ஓட்டுனர்கள் வாயிலாக இனி எவ்வித பிரச்சனைகள் ஏற்பட்டாலும் உடனே இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து புகார் அளிக்க முடியும். மே முதல் வாரத்திலிருந்து இந்த க்யூ ஆர் கோட் நடைமுறைக்கு வரும் என தெரிகிறது.