ஆட்டோ மீது லாரி மோதல் 3 மாணவிகள் படுகாயம்

பெங்களூர் : நவம்பர். 23 – ஆட்டோ மீது வேகமாக வந்த கேன்டர் வாகனம் மோதியதால் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ள சம்பவம் சிக்கபள்ளாபுரா மாவட்டத்தின் கௌரிபிதனூரில் உள்ள நாகப்பா ப்ளாக் அருகில் நடந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ஆறு போரையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இவர்களில் மூன்று மாணவியரின் நிலைமை கவலைக்கிடமாயுள்ளது . விதுராஷ்ரயாவிலிருந்து கௌரிபிதனூருக்கு வரும் மார்கத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. கௌரிபித்தனுரிலுள்ள கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த மாணவர்கள் ஆட்டோவில் சென்ற நிலையில் அனைவரும் காயங்களடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கௌரிபிதனூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மூன்று மாணவிகளின் நிலைமை தீவிரமாக இருப்பதால் கூடுதல் சிகிச்சைக்காக பெங்களூருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான ஆட்டோவில் ஓட்டுநர் உட்பட 11 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்களில் ஓட்டுநர் மற்றும் இரண்டு மாணவர்கள் உட்பட எட்டு மாணவியர் இருந்துள்ளனர். தொட்டகுருகோடு கிராமத்தை சேர்ந்த இவர்களுக்கு என்றுமே பஸ் கிடைப்பதில்லை. இதனால் இவர்கள் அனைவரும் தினமும் ஆட்டோவிலேயே கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை வீட்டிலிருந்து வந்த இவர்கள் ஆட்டோ பிடித்து பயணித்து வந்துள்ளனர். இவர்கள் அனைவருமே இரண்டாவது ஆண்டு பி யு சி படிக்கும் மாணவர்கள். ஆட்டோ ஓட்டுநர் லோகேஷ் (19) என தெரியவந்துள்ளது. ஸ்ரீனிவாஸ் , வெண்ணெலா , சஹானா , த்ரிவேணி , பவித்ரா மற்றும் ரோகினி ஆகியோர் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள். இவர்களில் மூன்று மாணவிகளின் நிலைமை மோசமாகயிருக்கும் நிலையில் மற்றவர்கள் உயிராபத்திலிருந்து தப்பியுள்ளனர் . கேன்டர் வாகனம் மோதிய வேகத்திற்கு ஆட்டோ சின்னாபின்னமாகியுள்ளது . பின்னர் பொதுமக்கள் சேர்ந்து ஆட்டோவை சாலையில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உடன் கௌரிபிதனூர் கிராமத்தார போலீசார் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்ளை மருத்துவமனையில் சேர்த்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற்னர்.