ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை

பெங்களூர், செப் 9-
உலகில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்கொலை சம்பவங்களால் அதிகமானோர் பாதிக்கப்படுவார்கள் என, மனநல மருத்துவர்கள், பேராசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
உலக தற்கொலை தடுப்பு தினத்தையொ ட்டி தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனமான நிமான்ஸ் மருத்துவமனையில்
சொசைட்டி லாஸ் சர்வேவர்ஸ் பாரம் என்ற அமைப்பின் சார்பில் வெள்ளிக்கிழமை நகரில் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்
வல்லுநர்கள் தற்கொலை தடுப்பு குறித்து விவாதித்தனர். குழந்தை மற்றும் இளம் பருவ மன நல மருத்துவர் எமிரேட்டஸ் பேராசிரியர் டாக்டர் சேகர் பி. சேஷாத்திரி பேசியதாவது :
நேசிப்பவரின் இழப்பு, தகராறு, மோதல், குற்ற உணர்வு ,களங்கம், அவமானம், போன்ற உணர்வுகளால் தற்கொலை எண்ணங்களுக்கு வலியுறுத்துகிறது.
தற்கொலை முயற்சியில் உயிர் பிழைத்தவர்களின் குரல்கள் தற்கொலையை தடுப்பதற்கு இன்றியமையாதவை.
தற்கொலையை தடுக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றார்.
சொசைட்டி லாஸ் சர்வேவர்ஸ் பாரம் அமைப்பாளர்
டாக்டர் அனிஷ் வி செரியன் பேசுகையில், சிலர் தற்கொலை முயற்சிக்குப் பிறகு அவமானத்தையும் கலங்கத்தையும் உணர்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை இயல்பாக எங்கள் அமைப்பு பாதுகாக்க பாடுபடும் இது தொடர்பாக தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.
என்றார்.

அனன்யா அறக்கட்டளையின் நிறுவனர் சினேகா ராவ் கூறுகையில் எனது மகளை இழந்த போது, நான் முன்பிருந்த நிலைக்கு திரும்புவேன் என்று நினைக்கவில்லை.

அப்போது எனது குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் எனக்கு ஆதரவாக நின்றார்கள். வலியை கடக்க அவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள்.

தற்கொலையை தடுக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

மூத்த பேராசிரியர் டாக்டர் பிரபா சந்திரா பள்ளிகள், கல்லூரிகள், பணியிடங்களில் மற்றும் பொது இடங்களில் தற்கொலை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கட்டாயமாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.