ஆதார் குறித்து புதிய தகவல்

புதுடெல்லி: ஜன. 19: பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஆதார் அட்டை இனி ஏற்றுக்கொள்ளப்படாது என பணியாளர் வருங்கால வைப்பு நிதியம் (இபிஎஃப்ஓ) தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஜனவரி 16-ம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) உத்தரவைத் தொடர்ந்து, பிறந்த தேதிக்கான அடையாளமாக இனி ஆதார் அட்டை ஏற்கப்படாது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது.
மேலும், பிறந்த தேதியில் திருத்தம் மேற்கொள்வதற்கான ஆவணங்களின் பட்டியலில் இருந்தும் ஆதார் நீக்கப்படுவதாக இபிஎஃப்ஓ அறிவித்துள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 2023 டிசம்பர் 22 அன்றுவெளியிட்ட சுற்றறிக்கையில், “அங்கீகாரத்துக்கு உட்பட்டு ஒரு தனிநபரின் அடையாளத்தை அறிந்து கொள்வதற்கு ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம். ஆனால், பிறந்த தேதிக்கான ஆதாரமாக அதனை கருதமுடியாது” என்று கூறியிருந்தது.