ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து

ஆந்திராபிப்.29-
ஆந்திராவில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தயாராகி விட்டது. தொகுதி பங்கீடுகளும் முடிந்து, இரு கட்சித் தலைவர்களும் 99 தொகுதிகளுக்கு முதல் கட்ட வேட்பாளர்களையும் அறிவித்து விட்டனர்.
ஆனால், ஜனசேனா கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக, தற்போதைய தெலுங்கு தேசம் – ஜனசேனா கூட்டணியுடன் இணையுமா? இல்லையா? என்பது ஒருபுறம் இருக்க, ஆளும் கட்சியான ஜெகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தனித்தே போட்டி என அறிவித்துள்ளனர். மேலும், மக்களின் அதிருப்தியைச் சம்பாதித்துள்ள எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களின் தொகுதிகளை, வேறு தொகுதிகளுக்கு மாற்றியுள்ளார் முதல்வர் ஜெகன். இதனால் இக்கட்சியில் பயங்கரமான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.இதன் காரணமாக இதுவரை 7 எம்.பி.க்கள், 6 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு, தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சிகளில் இணைந்து விட்டனர்.இவர்களைத் தொடர்ந்து பல மாநகராட்சி மேயர்கள் முதற்கொண்டு, நகராட்சி, பஞ்சாயத்து, ஊராட்சி நிர்வாகிகள் வரை பலர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்து வருகின்றனர். தினந்தோறும் ஆளும் கட்சியில் ராஜினாமா படலம் தொடர்வதால், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.