ஆந்திர விபத்தில் கர்நாடகத்தை சேர்ந்த 5 பேர் பலி – 11 பேர் காயம்

பெங்களூரு, செப். 15: ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டத்தில் நடந்த பயங்கர சாலை விபத்தில் பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டம், கே.வி.பள்ளி தாலுகா மாதம்பள்ளியில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேர் குரூசர் வாகனத்தில் திருப்பதிக்கு சென்றுள்ளனர். திருப்பதிக்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தப்போது, மாதம்பள்ளி கிராமம் அருகே வாகனம் விபத்திற்குள்ளானது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து நடந்தவுடன், அப்பகுதி மக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகனத்தில் சிக்கியிருந்த உடல்களை மீட்டனர். பின்னர், இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.