ஆனேக்கல் அருகே விபத்து: இருவர் பலி

பெங்களூரு, ஏப். 30: நகரின் புறநகர் பகுதியான ஆனேக்கல் என்ற இடத்தில் நடந்த இருவேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர்.
ஆனேகல் தளி வீதியில் உள்ள சுன்வார கேட் அருகே, பஞ்சரான லாரி யின் டயரை டிரைவர் மாற்றும் போது விபத்து ஏற்பட்டது. டயரை கழற்றுவதற்காக ஜாக் போடும் போது வேகமாக வந்த பைக் ஒன்று ஜாக் மீது மோதியது. இதில் ஜாக்நழுவியதால் லாரி டிரைவர் மீது சரிந்தது. இதில் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் பலத்த காயம் அடைந்த பைக் ஓட்டுநர் ஆனேக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். டோத்தகடே கிராமத்தைச் சேர்ந்த ரோஹித் குமார் என்ற லாரி ஓட்டுநர் உயிரிழந்தார். உரம் நிரப்பப்பட்ட லாரியை ஒட்டிச் சென்றபோது, ​​சுன்வார கேட் அருகே பஞ்சர் ஏற்பட்டது. அவர்கள் லாரியின் அடியில் படுத்து மற்றொரு டயர் போடுவதற்காக ஜாக் போட்டுக் கொண்டிருந்தனர். இருட்டில் வேகமாக வந்த பைக் லாரி டிரைவர் மீது மோதியது. ஆனேக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
மற்றொரு சம்பவத்தில், பன்னர்கட்டா சாலையில் உள்ள சகல்வாரா அருகே பைக் ஓட்டுநர் பிரதாப் (26) இறந்தார். நண்பருடன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது.
அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக் ஓட்டுநர் பிரதாப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு பைக் ஓட்டி பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பன்னர்கட்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்துள்ளது.அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.