ஆன்லைன் சூதாட்டம் அமலாக்கத்துறை அதிரடி சோதனை – ரூ.417 கோடி சொத்துக்கள் பறிமுதல்

புது டெல்லி :செப்டம்பர். 16 – மஹாதேவ் ஆள் லைன் சூதாட்டங்கள் தொடர்பாக இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தி 417 கோடி ரூபாய்கள் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளனர். கொல்கத்தா , பூபால , மற்றும் மும்பை நகரங்களில் மஹாதேவ் ஆப்புடன் தொடர்பு கொண்டிருந்த அக்கிரம பண பறிமாற்ற கும்பல்களுக்கு எதிராக தீவிர சோதனைகள் மேற்கொண்டு பெருமளவிலான ரொக்கம் நகைகள் மற்றும் வேறு பொருள்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் . மஹாதேவ் ஆப் துபாயிலிருந்து செயல்பட்டுவருவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மற்றபடி இந்த ஆப் 70 -30 சதவிகித லாப பங்கீட்டுடன் செயலாளர்களை நியமித்துக்கொண்டுள்ளது. சௌரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் ஆகியோர் நிறுவிய இந்த நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை ஆப்பில் சேர்க்க மற்றும் பல்வேறு வங்கி கணக்குகளை பயன்படுத்திக்கொண்டு சட்டவிரோத நிதிபரிமாற்றம் செய்ய ஆன் லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுவந்துள்ளது என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த சூதாட்ட பணங்களை வெளிநாட்டு கணக்குகளுக்கு மாற்ற ஹவாலா நடவடிக்கையில் இறங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிறுவனத்தின் புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் செல்பாட்டாளர்களுக்காக தேடி கண்டுபிடிப்பவர்களை கவர சூதாட்ட வெப் சைட்டுகளில் விளம்பரங்களுக்காக பெரிய அளவில் பணம் செலவிடப்பட்டுள்ளது. என அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாய் நகரை சேர்ந்தவர்கள் . மஹாதேவ் சூதாட்ட ஆப் மிக பெரிய அளவில் செயல்பட்டுவந்துள்ளது. சட்டவிரோத சூதாட்ட ஆப்புகளை சொந்தமாக்கிக்கொள்ள ஒன்று கூடி செயல்பட்டு வந்துள்ளது. ஆன் லைன் சூதாட்டம் , பந்தயங்கள் நடத்திவந்த பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அவற்றிற்கு தொடர்புடைய நபர்களின் வங்கி கணக்குகளிலிருந்து 5.௮௭ கோடி ரூபாய்கள் ரொக்கத்தை அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்ட் 27 அன்று முடக்கியது. இவ்வித சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு எதிராக வந்த பல புகார்களின் அடிப்படையில் பெங்களூர் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் பதிவாகியிருந்தது . இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதத்திலிருந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.