ஆபரேஷன் தாமரையை தடுக்கும் கை

பெங்களூர் : மே. 11 – மாநிலத்தில் நேற்று சட்ட மன்ற தேர்தல்கள் மிகவும் விறுவிறுப்பாகவும் உற்சாகத்துடனும் இது வரை மாநிலத்தில் பதிவாகியில்லாத 74 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் மாநிலத்தின் இரண்டு பிரதான கட்சிகளான பி ஜே பி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே தங்கள் ஆட்சி அமைக்க பகீரத முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.இந்த விஷயத்தில் ஒரு வேளை பி ஜே பி தன்னுடைய ஆபரேஷன் தாமரை நடவடிக்கையை மேற்கொண்டால் அதற்க்கு மாற்றாக காங்கிரஸ் கட்சியும் தன் சின்னமான கை ஆபரேஷன் நடவடிக்கை மேற்கொள்ள தயாராகி வருகிறது. மாநில ஆட்சியை அமைக்க எந்த கட்சிக்கும் குறைந்தது 113 உறுப்பினர்கள் ஆதரவு இருக்க வேண்டும். தற்போது மூன்றாவது முக்கிய கட்சியாக உள்ள ம ஜ தாவும் தங்களின் எம் எல் ஏக்களை எந்த தேசிய கட்சிக்கும் மாறாத வகையில் கவனம் செலுத்தி வருகிறது. தவிர மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் உள்ள நிலையில் மா ஜா தா கடந்த 2018 தேர்தல் போன்று இந்த முறையும் இரண்டு தேசிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கும் எதிர்பார்ப்பில் உள்ளது. ஆனாலும் புதிதாக தேர்வாகியுள்ள தங்கள் கட்சி எம் எல் ஏக்கள் மாற்று கட்சிகளுக்கு மாறாதிருப்பதை தவிர்ப்பது ம ஜ தாவின் முக்கிய கவனமாக உள்ளது. இது குறித்து ம ஜ தா மாநில தலைவர் குமாரசாமி கூறுகையில் நாட்டின் இரண்டு தேசிய கட்சிகளும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பெறாத நிலையில் எங்கள் கட்சியை உடைக்க முதற்சிப்பார்கள்.இந்த நிலையில் நாங்கள் முழு விழிப்புடன் எங்கள் எம் எல் ஏக்களை கண்காணித்து வருகிறோம். தவிர எங்களின் உதவி இன்றி எந்த கட்சியும் மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளோம். என்றார். இதே வேளையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில் காங்கிரஸ் மாநிலத்தில் 150 இடத்திற்கு குறைவாக வெற்றி பெற்றால் பி ஜெ பி காங்கிரசை பிளவு பிதுர்த்தும். ஆனால் இது போன்ற நிலைமையை சமாளிக்க காங்கிரஸ் கட்சியும் மாற்று உபாயங்களை வைத்துள்ளது. இது குறித்து பி ஜேபி மற்றும் மஜ தா வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களிடம் ஏற்கெனவே பேச்சு வார்த்தைகள் துவங்கியுள்ளது. இந்த விஷயத்தில் நாங்கள் நேர்மையாய் இருப்போம். நாங்கள் முழு மெஜாரிட்டி வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது . ஆனாலும் பி ஜே பிய்௮னர் மற்ற கட்சிகளின் எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சிக்கு வர முயற்சிப்பதை தடுக்கும் வகையில் கவனமாக இருப்போம்.என்றார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பி ஜே பி தேர்தல் குழு தலைவர் மற்றும் எம் பி ஷோபா கரஞ்சலாகி நாகலோ முழு பெரும்பான்மை பெற உள்ள நிலையில் மற்ற கட்சிகளின் எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கும் தேவை இருக்காது.ஆனாலும் காங்கிரசின் ஆபரேஷன் கை நடவடிக்கை வெறும் கனவாக போகுமே தவிர எங்கள் உறுப்பினர்களை வாங்க முடியாது . என்றார். இதே வேளையில் மாநில மேலவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மாநில கடலோர மாவட்டங்கள் தேர்தல் பிரசார பொறுப்பாளர் பி கே ஹரிப்ரசாத் கூறுகையில் கடந்த ஐந்தாண்டுகளில் மாநிலத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.எங்களின் தற்போதைய காங்கிரஸ் முன்னர் போல் எளிமை மற்றும் கட்சி மாற்றுதல்களுக்கு அடிபணியாது. நாங்கள் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் லக்ஷ்மன் சவுதி ஆகியோரை களம் இறக்கி பி ஜே பி க்கு அதிற்சியை கொடுத்துள்ளோம். இதே போல் மேலும் பல அதிர்ச்சிகள் பி ஜே பிக்கு காத்திருக்கிறது. என்றார். கடந்த 2018 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பி ஜெ பி பெரும்பான்மை பெற்றிருந்தும் வெறும் ஒன்பது உறுப்பினர்கள் குறைந்த நிலையில் ம ஜ தா மாறும் காங்கிரஸ் இனைந்து ஆட்சி அமைத்தனர். ஆனால் பின்னர் காங்கிரஸ் மற்றும் ம ஜ தாவை சேர்ந்த 17 எம் எல் ஏக்களாக்கி தங்களிடம் கவர்ந்து 2019ல் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.