ஆபாச சிடி வழக்கு: போலீஸ் கமிஷனர், டிசிபி மீதான விசாரணைக்கு தடை

பெங்களூரு : நவம்பர் : 25 – முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜாரகிஹோலி மீதான ராஸலீலை சி டி புகாரை பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டிய குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துமாறு நகரின் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை ரத்து செய்யுமாறு நகர போலீஸ் ஆணையர் கமல் பந்த் , டி சி பி அனுசேத் மற்றும் கப்பன் பார்க் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மாருதி ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனு மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் இது குறித்த விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து இவர்களுக்கு சலுகை அளித்துள்ளது. ரமேஷ் ஜாரகிஹோலி ஆபாச சி டி விவகாரம் தொடர்பாக தனியார் புகார் பதிவாகியிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக தினேஷ் கல்லஹள்ளி அளித்த புகாரை வைத்து வழக்கு பதிவு செய்யாததன் பின்னணியில் கடமை தவறிய குற்றத்தின் கீழ் தனியார் புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது. போலீஸ் ஆணையர் கமல் பந்த் , டி சி பி எஸ் என் அனுசேத் , மற்றும் இன்ஸ்பெக்டர் மாருதி ஆகியோருக்கு எதிராக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. ரமேஷ் ஜாரகிஹோலியின் வழக்கு விசாரணை முடிந்துள்ளது. இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான விசாரணை உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் எஸ் பி பி ப்ரசன்னகுமார் கோரிக்கை விடுத்திருந்தார்.