ஆபாச சுவரொட்டி விவகாரம் ரமேஷ் ஜார்கிஹோலி வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

பெங்களூர்:அக்டோபர். 31 – மோசக்காரன் , சி டி மாஸ்டர் , முன்னாள் மந்திரியாயுளார் என ஒருமையில் ஆபாசமாக திட்டியுள்ளதால் ஆத்திரமடைந்துள்ள துணை முதல்வர் டி கே சிவகுமாரின் ஆதரவாளர்கள் சதாசிவநகரில் உள்ள ஜார்கஹாலி வீட்டின் சுவர்கள் மீது ஆபாச வார்த்தைகளில் போஸ்டர்கள் ஒட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். டி கே சிவகுமாரின் வீட்டின் பின்பகுதியில் உள்ள ரமேஷ் ஜாரகஹோலி வீட்டின் சுவர்களில் ஆபாச வார்த்தைகள் உள்ள போஸ்டர்களை ஒட்டிவைத்துள்ளனர் . சில தேவையற்ற வார்த்தைகளை போஸ்டர்களில் எழுதியிருப்பதுடன் இது தான் உன் கலாச்சாரம் எனவும் போஸ்டர்களில் எழுதப்பட்டுள்ளது . இப்படி அசிங்க வார்த்தைகளால் எழுதப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்படுள்ளது குறித்து தகவல் அறிந்த உடனேயே போலீசார் விரைந்து வந்து போஸ்டர்களை அகற்றியுள்ளனர். சம்பவ இடத்திற்கு சேஷாதிரிபுரம் போலீஸ் ஏ சி பி பிரகாஷ் நேரில் வந்து ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரமேஷ் ஜாரகிஹோலி வீட்டுக்கு பாதுகாப்பை அதிகரித்துளார்.