ஆபாச வலையில் சிக்கவைத்து 82 லட்ச ரூபாய் மோசடி

பெங்களூர் : ஆகஸ்ட். 15 – தன்னுடைய மகனின் காச நோய்க்கு பொருளாதார உதவியை பெரும் சாக்கில் நபர் ஒருவரை அறிமுகப்படுத்திக்கொண்டு பின்னர் அவரை ஆபாச வழியில் சிக்க வைத்த இரண்டு பெண்கள் இவரிடமிருந்து 82 லட்ச ருபாய் பெற்று மோசடி செய்துள்ள சம்பவம் நகரின் ஜெயநகரில் நடந்துள்ளது. ஆபாச வலையில் சிக்கவைத்து மோசடி செய்தது தொடர்பாக ஜெய்சங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் பதிவாகி தற்போது இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஸ்ரீநகரை சேர்ந்த 60 வயதை சேர்ந்தவர் இந்த மோசடிக்கு ஆளாகியிருப்பதுடன் இது குறித்து அவருடைய தோழி 40 வயது பெண் மற்றும் அவளுடைய சகோதரிக்கு எதிராக வழக்கு பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதல் புகார்தாரருக்கு அவருடைய நண்பன் பெண் ஒருவரின் மகனுக்கு காச நோய் தாக்கப்பட்டு அவதிக்குள்ளாகியிருப்பதால் அவனுக்கு நிதி உதவி அளிக்குமாறு கேட்டுள்ளனர். அதே வேளையில் உத்தரஹள்ளி வீதியில் ரஜதாத்ரி ஓட்டலுக்கு பெண்ணை அழைத்து சென்று 5 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். பின்னர் இருவருக்குள் நட்பு வளர்ந்துள்ளது. இந்த நட்பை பயன்படுத்தி அந்த பெண் அடிக்கடி போன் செய்து தன்னுடைய கஷ்டங்களை கூறி வந்துள்ளாள். இந்த நிலையில் மே மாதம் எலெக்ட்ரானிக் சிட்டியின் உசுக்கூர் வீதி அருகில் உள்ள ஒரு ஓட்டலில் பாதிக்கப்பட்டவரை பெண் அழைத்து சென்று தன்னை பாலியல் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளாள். இது நடந்த பின்னர் இரண்டு மூன்று முறை மீண்டும் இருவரும் அதே ஓட்டலில் சந்தித்துள்ளனர். அப்போது ரகசியமாக புகார்தாரரின் நிர்வாண போட்டோக்கள் , மற்றும் வீடியோ படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன்னுடைய சகோதரி ஏன் கூறி மற்றொரு பெண்ணை அறிமுகப்படுத்தியுள்ளாள். சில நாட்களுக்கு பின்னர் இவருடைய ஆபாச நிர்வாண போட்டோக்களை அனுப்பிய குற்றவாளியின் சகோதரி தனக்கு பணம் அளிக்காவிட்டால் போட்டோ மற்றும் விடீயோக்களை உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பிவைப்பதாக மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலுக்கு பயந்த பாதிக்கப்பட்டவர் தன்னை தவணையாக 82 லட்ச ருபாய் வரை கொடுத்துள்ளார். இது குறித்து யாருக்காவது தெரிவித்தால் உன் மகளை பாலியல் பலாத்காரத்தில் ஈடு படுத்துவோம் என்றும் இரண்டு பெண்களும் மிரட்டியுள்ளனர். தற்போது மீண்டும் 40 லட்ச ரூபாய் கொடுக்குமாறு மிரட்டிவந்துள்ள நிலையில் வெறுத்துப்போன பாதிக்கப்பட்டவர் தற்போது ஜெயநகர் போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளார் . இது குறித்து வழக்கு பதிவு செய்துகொண்டுள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.