ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

காபூல்: மார்ச் 19- ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.05 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உலகின் பல்வேறு நகரங்களில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் போன்ற இயற்கை பேரிடர்கள் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.05 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரின் தெற்கே-தென்மேற்கு திசையில் 632 கி.மீ தொலைவில் பாகிஸ்தானை ஒட்டிய பலோசிஸ்தானின் நுஷ்கி பகுதியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.