ஆப்கானிஸ்தான் மழை வெள்ளம் 50 பேர் பலி

காபுல், மே 11- ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல், பஹ்லன் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பல நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வீடுகளை இழந்துள்ளனர்.இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், மீட்பு நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.