ஆம்புலன்ஸ் ஆட்டோ மோதல் : நான்கு பேர் காயம்

சிக்கமகளூர் : நவம்பர். 25 – ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோவுக்கிடையே நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் நான்கு பேர் காயமடைந்துள்ள சம்பவம் தக்ஷிண கன்னடா மாவட்டத்தின் சிக்கமகளூரு மாவட்டத்திற்கு தொடர்பு தரும் சார்மாடி காட் அருகில் நடந்துள்ளது. சார்மாடி காட் அருகில் உள்ள முதலாவது திருப்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த விபத்தில் காயமடைந்த நான்கு பேரை உள்ளூர் மறுத்த்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதுடன் அனைவரும் உயிராபத்திலிருந்து தப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . முடிகெரேவை சேர்ந்த ஒரு நோயாளியை மங்களூரு மருத்துவமனையிலிருந்து முடிகெரேவில் விட்டு திரும்பி சென்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ் மற்றும் தர்மஸ்தலாவிற்கு சென்று கடவுளை தரிசித்து விட்டு வந்துகொண்டிருந்த ஆட்டோ சார்மாடி காட் முதல் திருப்பத்தில் நேருக்கு நேர் மோதியுள்ளது. விபத்துக்குட்பட்ட ஆட்டோ முடிகெரே தாலூகாவின் பனகல் என்ற கிராமத்தை சேர்ந்ததாகும். ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதியதன் விளைவாய் இரண்டு வாகனங்களும் அப்பளம் போல் நொறுங்கியுள்ளன. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை .உள்ளூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.