ஆம்புலன்ஸ் கவிழ்ந்து 4 பேர் சாவு

உடுப்பி, ஜூலை.20- உடுப்பி மாவட்டத்தில் நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நோயாளிகள் ஹொன்னாவரில் இருந்து குந்தாப்பூருக்கு ஆம்புலன்சில் ஏற்றிச் செல்லப்பட்டனர், ஆனால் டிரைவரின் அதீத வேகம் மற்றும் கவனக்குறைவால், பைந்தூர் தாலுகாவில் உள்ள ஷிரூரு டோல் கேட்டில் ஆம்புலன்ஸ் மோதியது.
ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளாகும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


ஆம்புலன்ஸ் மோதியதில் நோயாளி, நோயாளியின் மனைவி மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உயிரிழந்தனர். இறந்தவர்கள் லோகேஷ் மாதவ நாயக், மனைவி ஜோதி, உறவினர்கள் கஜான நாயக் மற்றும் மஞ்சுநாத் நாயக் ஆகியோர் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் சுங்கச்சாவடி பணியாளரும், ஓட்டுனரும் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்கள் பற்றிய மற்ற விவரம் உடனடியாக தெரியவில பைந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.