ஆயிர கிராம கணக்காளர்கள் ஒரு மாதத்திற்குள் நியமனம் : அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா

பெங்களூர், பிப். 20- ஒரு ஆயிரம் கிராம கணக்கதிகாதிரிகள் நியமனம் குறித்து ஒரு மாதத்திற்குள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடுவதாக மாநில வருவாய்துறைத்துறை அமைச்சர் கிருஷ்ண பையே கௌடா தெரிவித்துள்ளார்நேற்று சட்டமன்றத்தில் பி ஜே பி உறுப்பினர் கிரண் குமார் கொடுகி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கிருஷ்ண பைரே கௌடா வருவாய்துறையில் பெருமளவில் காலியிடங்கள் உள்ளன. தற்போதைக்கு 1000 கிராம கணக்கர்களை நியமிக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். பி ஜே பி தலைமையிலான முந்தைய அரசு வருவாய்த்துறை அதிகாரிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவரை பல்வேறு இலாக்காக்களுக்கு மாற்றல் செய்துள்ளது இதனால் வருவாய்த்துறை செயல்பணிகள் முடக்கப்பட்டுள்ளன. இப்போது அத்தகைய தவறான உத்தரவுகள் வாபஸ் பெற படும். .2000 அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை நியமிக்க கோரிக்கை விடுத்துள்ள நிலையில் நான் எதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை . இதனால் என் கட்சியாளராகளே கூட என்னிடம் பகைமை காட்டி வருகின்றனர் .
ஆனால் எனக்கு வரமானவரித்துறை இலாக்கா பணிகள் நடப்பது முக்கியம். ஒவ்வொரு தாலூக்காவிலும் ஐந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குந்தாபுரா அலுவலகத்திற்கு 110 பதவிகள் ஒப்புதலாகியுள்ளன. இவற்றில் 70 பதவிகள் நிரப்பப்பட்டுள்ளன. கடந்த பத்து ஆண்டுகளாக வருவாய்துறை அதிகாரிகளுக்கு சரியான பயிற்சிகள் அளிக்கப்படவில்லை. இதனால் இந்த துறையி சட்டநியதிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த அறிவு குறைந்து வந்துள்ளது. இந்த நிலையில் அனைத்து ஊழியர்களுக்கும் படிப்படியாக பயிற்சி அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் கிருஷ்ண பைரே கௌடா தெரிவித்தார்.