ஆர்எஸ்எஸ் தொண்டர் சுட்டு கொலை : ஹாசனில் பதட்டம்

ஹாசன் : ஜனவரி. 10 – மீன் பிடிக்க சென்ற ஆர் எஸ் எஸ் (தேசிய ஸ்வயம்சேவகர் சங்கம் ) தொண்டர் ஒருவர் உடன்பட மூன்று பேரை சுட்டதில் அதே இடத்தில் ஒருவர் இறந்துள்ளார். மேலும் இரண்டு பேர் படு காயங்களடைந்த நிலையில் தற்போது மாவட்டம் முழுக்க பதட்டமாக உள்ளது. சக்லேஷ்பூரா தாலூகாவின் எசலூரு ஊராட்சி ஒன்றியத்தின் தம்பலகேறி கிரமத்தில் நேற்று நள்ளிரவு நடந்த இந்த துப்பாக்கி சூட்டால் ஏற்பட்டுள்ள பதட்டமான நிலையின் பின்னனியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தம்பலகேறி கிராமத்தின் நவீன் என்ற பச்சி (39) இறந்து போன ஆர் எஸ் எஸ் தொண்டர். தயானந்தா மற்றும் பத்மநாபா ஆகியோர் குண்டடிபட்டு பலத்த காயத்துடன் ஹாசன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் நிலையம் கவலைக்கிடமாயுள்ளது . நவீன் , தயானந்தா , பத்மநாப மற்றும் ரச்சாச்சாரி ஆகிய நான்கு பேரும் இரவு மீன் பிடிக்க சென்றுள்ளனர். ஹேமாவதி நதிக்கரையில் மீன் பிடித்து கொண்டு உட்கார்ந்திருந்தனர். அப்போது இவர்கள் நான்கு பேர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பிக்கியால் சுட்டுள்ளனர். இதில் நவீன் அதே இடத்தில் இறந்துள்ளார். பத்மநாபா மற்றும் தயானந்தா படு காயமடைந்ததுடன் அதிர்ஷ்டவசமாக ராச்சாச்சாரி துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பியுள்ளார். ஷிகாரிக்கு சென்றுகொண்டிருந்தவர்கள் இவர்களை சுட்டார்களா அல்லது நான்கு போரையும் கொல்வதற்கே நடந்த தாக்குதலா என்பது தெரியவில்லை. இட பரிசோதனைக்கு புலனாய்வு துறையினர் தயாராகி வருகின்றனர். மற்றொரு பக்கம் எப் எஸ் எல் குழுவின் வருகைக்காக இறந்த உடல் இருந்த இடத்திலேயே ராத்திரியிலிருந்து போலீசார் காத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்தும் எசலூரு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் பலரும் சம்பவ இடத்தை வந்து பார்வையிட்டுள்ளனர்.