ஆர்சிபி அணியில் இளம் வீரர் அசத்தல்

பெங்களூர், மார்ச் 30. ஆர்சிபி அணியின் இளம் பந்துவீச்சாளர் விஜய்குமார் வைஷாக் பவுலிங் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசிய வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி 59 பந்துகளில் 4 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 83 ரன்களை சேர்த்தார். கடைசி நேரத்தில் வந்த தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 20 ரன்களை விளாசி அசத்தினார். Get the Latest IPL 2024 Updates on MyKhel Schedule|Points Table|News இனிமேலும் பொறுக்க முடியாது.. பும்ராவின் ஈகோவை சீண்டிய ஹர்திக் பாண்டியா.. மும்பை இந்தியன்ஸ் விரிசல் இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேகேஆர் அணி 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றுள்ளது. அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 50 ரன்களும், சுனில் நரைன் 22 பந்துகளில் 47 ரன்களும் சேர்த்தனர். இதன் மூலமாக ஆர்சிபி அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி கேகேஆர் அணி அசத்தியுள்ளது. IPL Auction 2024: All About Kavya Maran, the CEO of Sunrisers Hyderabad | Oneindia News இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் பவுலர்களின் செயல்பாடுகளே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. முக்கிய பவுலர்களான முகமது சிராஜ் 3 ஓவர்களில் 46 ரன்களையும், யாஷ் தயாள் 4 ஓவர்களில் 46 ரன்களையும், அல்ஜாரி ஜோசப் 2 ஓவர்களில் 34 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர். ஆனால் இம்பேக்ட் பிளேயராக வந்த விஜய்குமார் வைஷாக் 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது ஸ்லோயர் பந்துகளும், கட்டர் பந்துகளும் கேகேஆர் அணிக்கு பிரச்சனையை கொடுத்தது. ரஸ்ஸலை பின்பற்றி வைஷாக் வீசிய பவுலிங்கில் சின்னச்சாமி மைதானத்தில் சரியாக எடுபட்டது.