ஆற்றில் குதித்து தொழிலதிபர் தற்கொலை

மங்களூர் : மே. 26 – உடலில் பலூனை கட்டிக்கொண்டு குமாரதாரா நதியில் குதித்து தொழிலதிபர் தற்கொலை செய்து ஒண்டுள்ள சம்பவம் கடபா தாலூகாவின் குத்மாறு கிராமத்தின் ஷாந்திமோகரூ அருகில் நடந்துள்ளது. ஆலங்காரு கூட்டுறவு சங்க தலைவர் சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டவர். சந்திரசேகர் தன் உடலில் பலூனை கட்டிக்கொண்டு ஷாந்திமோகரூ பாலத்தில் இருந்து நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தன்னுடைய இறந்த உடல் உடனே கிடைக்கட்டும் என்ற எண்ணத்தில் உடலில் பலூனை கட்டி கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் நீரில் மிதக்கும் பலூனை பார்த்த உள்ளூர் வாசிகள் நதியில் இறங்கி பார்த்தபோது சந்திரசேகரின் இறந்த உடல் கிடைத்துள்ளது. தொழிலதிபர் சந்திரசேகரின் தற்கொலைக்கு உண்மையான காரணம் இன்னும் தெரிய வரவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடபா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னரே தற்கொலைக்கான காரணம் தெரிய வரும். காரணம் இதுவே இருந்தாலும் தற்கொலை முடிவு என்றுமே வேண்டாம். தற்கொலை எண்ணம் மனதில் தோன்றிய உடனேயே உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பேசுங்கள். அப்படியும் உங்கள் எண்ணம் மாறவில்லை என்றால் 9152987821 என்ற உதவி எண்ணுக்கு அழைப்பு கொடுங்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்