ஆள் மாறி தாக்குதல் -அப்பாவி பெண் கை துண்டானது

பெங்களூர் : அக்டோபர் . 16 – பழைய விரோதத்தின் காரணமாக தன்னை தாக்க வந்த ஒருவன் வீசிய கத்தி சம்பந்தமே இல்லாத மற்றொருவர் மீது பட்டு அவர் படு காயமடைந்துள்ள சம்பவம் சுப்ரமண்யா நகரின் காயத்ரி நகரில் நேற்று நள்ளிரவு நடந்துள்ளது.
கத்தி தாக்குதலுக்குள்ளாகி தன்னுடைய கை வெட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தன்னுடைய எதிராளியை தாக்க வந்தவன் வாடகை வீட்டில் குடியிருந்த பெண்ணை கத்தியால் தாக்கியுள்ளான் .ராகேஷ் என்ற ராகு என்பவன் மீது அபிகௌடா என்ற அமூல் என்பவன் வாயிலாக கொலை முயற்சி நடந்துள்ளது. ராகேஷ் மற்றும் அபிகௌடாவுக்கிடையே பழைய விரோதம் இருந்துள்ளது. இம்மாதம் ஐந்தாம் தேதி இவர்களுக்கிடையில் விநாயகர் நிறுவுவதில் தகராறு நடந்துள்ளது. அப்போது அபிகௌடாவின் கையில் ராகேஷ் கும்பல் கத்தியால் அறுத்துள்ளனர் . இவர்கள் இருவரும் ஒன்றாகவே பழகிவந்தவர்கள் என்ற போதிலும் ஒரு பெண் விஷயமாக இருவருக்குள் தகராறு துவங்கியுள்ளது. பின்னர் அடிக்கடி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு வந்துள்ளனர்.இதே போல் நேற்று ராகேஷை தாக்க அபிகௌடா கத்தியை பிடித்து வந்துள்ளான். வாடகை வீட்டில் இருந்த வீடே ராகேஷ் வீடு என தெரிந்து வீட்டின் கதவை கத்தியால் உதைத்துள்ளான். வீட்டில் வாடகைக்கு இருந்த பெண்மணி வெளியில் வந்த உடன்ராகேஷ் என்ற எண்ணத்தில் பெண்ணின் மீது கத்தியால் தாக்கியுள்ளான் . இந்த சம்பவத்தில் பெண்ணின் கை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் அபீகௌடா அங்கிருந்து தப்பியோடியுள்ளான். இந்த சம்பவம் குறித்து சுப்ரமண்யபுரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.