ஆஸ்திரேலியா நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது

சிட்னி,டிச.31- உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. 2023 ஆம் ஆண்டு பிறந்ததை ஒட்டி கண்ணை கவரும் வகையில் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில், ஆஸ்திரேலியா நாட்டிலும் புத்தாண்டு பிறந்தது. நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை கொண்டாடினர். கண்ணைக் கவரும் வகையில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஹேப்பி நியூ இயர் என சொல்லி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து புத்தாண்டை வரவேற்றனர்.