இடி மின்னலுடன் மழை பெய்யும்

பெங்களூர் : மே. 18- கடும் வெய்யிலால் பல மாதங்களாக அவதிக்குள்ளாகியிருந்த மக்களுக்கு இப்போது பல மாநிலங்களில் பெய்து வரும் மழை சற்றே ஆறுதல் தந்துள்ளது. பல மாநிலங்களில் வேகா காற்று , இடி மின்னல்களுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் உட்பட பல மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சூறக்காற்று , இடி மின்னல்களுடன் கூடிய பலத்த மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி அடுத்த ஏழு நாட்கள் தமிழ்நாடு , புதுவை , காரைக்கால் , கேரளா , மாஹே , லக்ஷதீப் , மற்றும் தெற்கு பகுதிகளில் பரவலாக இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி மீ வேக காற்றுடன் பலத்த மழை பெய்ய உள்ளது. இதே காலகட்டத்தில் கடலோர ஆந்திர பிரதேசம் , யானம் , தெலுங்கானா , ராயலசீமா ஆகிய இடங்களில் பரவலாக சாதாரண முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. இந்த வேளைகளில் மணிக்கு 30 முதல் 40 கி மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசும். தவிர கர்நாடகாவிலும் இன்று பலத்த மழைக்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த பகுதிகளில் வரும் மே 21 வரை மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும். அடுத்த 24 மணிநேரத்தில் தெலுங்கானா , கடலோர க்ரநாடகா , தமிழ்நாடு , கேரளா லக்ஷதீப் , அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளிலும் இடி மின்னலுடன் கூடிய சாதாரண மழை பொழியும். தவிர தெற்கு சத்தீஸ்கர் , தெற்கு ஒடிஸ்ஸா , தமிழ்நாடு , ஆந்திரப்பிரதேசம் , சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சாதாரண மழை பெய்யும். நாட்டின் வட கிழக்கு பகுதிகள் , விதர்பா மரத்வாடா, தெற்கு மத்திய மஹாராஷ்டிரா , குஜராத் ஆகிய பகுதிகளிலும் சாதாரண மழைக்கு வாய்ப்புகள் உள்ளது. பஞ்சாப் , ஹரியானா , டெல்லி , உத்தரபிரதேசம் , பீஹார் , ஜார்கண்ட் , சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் உஷணமும் அதிகரிக்கும். இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.