இடுப்பளவு நீரில் மூழ்கிய 6 பேர் மீட்பு

நாக்பூர், செப். 23:
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதில், நாக்பூர் நகரில் அம்பஜாரி ஏரி பகுதியில் வீடு ஒன்றில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதனால், அந்த வீட்டில் இருந்த முதியவர்கள் உள்பட சிலர் வெள்ள நீரில் தத்தளித்தபடி இருந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில், 6 பேரை மீட்பு குழுவினர் பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது என மீட்பு படையினர் தெரிவித்தனர்

. இதுபற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.