இணையதளங்களில் சூதாட்டம்:2 பேர் கைது, ரூ. 29.45 லட்சம் பறிமுதல்

பெங்களூரு, செப். 15: 2 இணையதளங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்த சிசிபி போலீசார், ரூ. 29.45 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் அண்மையில் 2 இணையதளங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரைக் கைது செய்த சிசிபி போலீசார் ரூ. 29 லட்சத்தை கைப்பற்றினர். கடந்த
ஒரு மாதமாக நீடித்த தொடர் நடவடிக்கைகளுக்குப் பிறகு, கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரை சிசிபி போலீசார் கைது செய்து, ரூ.29.45 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இணையதளச் சேவைகளை வழங்கியதற்காக, சிசிபியின் சிறப்புக் குழு, எச்.எஸ்.ஆர் லேஅவுட் காவல் நிலைய எல்லையில் இருவரை கைது செய்தது. இதற்கான நடவடிக்கையை ​​ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்ப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எச்.எஸ்.ஆர் லேஅவுட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து கிடைத்த தகவலின் பேரில், ஆகஸ்ட் 18 ஆம் தேதி இணையதளங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்ட‌ கிரிஷை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரொக்கப்பணம் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்து, அவரது வங்கி கணக்கை முடக்கினர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 4 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.