இதுவரை 14 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்-ஜம்முகாஷ்மீர் டிஜிபி தகவல்

குல்காம், ஜன. 14- ஜம்முகாஷ்மீர் மாநிலம் குல்காமில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் நடத்திய மோதலின் போது மூத்த காவலர் ரோஹித் சிப் உயிரிழந்தார். அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய ஜம்முகாஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது-
இந்த ஆண்டு இதுவரை 8 என்கவுன்டர்கள் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த 7 பேர் உட்பட 14 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். எங்கள் துணிச்சலான கான்ஸ்டபிள் ரோஹித் சிப்பை இழந்தது துரதிர்ஷ்டவசமானது. இந்த என்கவுன்டரின் போது, ​​பயங்கரவாதிகள் பொதுமக்களை பணயக்கைதிகளாகப் பிடித்து கேடயங்களாகப் பயன்படுத்த முயன்றனர். ஆனால் எங்கள் துணிச்சலான ஜவான்கள் அந்த பொதுமக்களைக் காப்பாற்றினர். குடியரசு தின கொண்டாட்டங்களையொட்டி எங்களது வீரர்கள் எல்லையில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.