இந்தியாவின் கிழக்கு கொள்கையில் ஏசியன் மையத்தூண்: பிரதமர் மோடி பேச்சு

இந்தோனேசியா, செப். 7- ஏசியன்-இந்தியா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி இந்தோனேசியா சென்றுள்ளார்.
இந்தோனேசியா சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தோனேசியாவில் உள்ள இந்தியர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்றனர். பின்னர், ஏசியன்-இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- 1. நமது கூட்டாண்மை நான்காவது தசாப்தத்தில் நுழைகிறது 2. இந்தியாவின் கிழக்கு கொள்கையில் ஏசியன் மையத்தூணாக விளங்குகிறது 3. இந்தோ-பசிபிக் மீதான ஏசியன் கண்ணோட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது 4. இந்தோ-பசிபிக் முயற்சியில் ஏசியன் முக்கியமான இடத்தை ஆக்கிரமித்துள்ளது 5. உலக வளர்ச்சியில் ஏசியன் முக்கிய பங்கு வகிப்பதால் வளர்ச்சியின் மையமாக உள்ளது 6. உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலைக்கு மத்தியிலும் நமது பரஸ்பர ஒத்துழைப்பில் நிலையான முன்னேற்றம் உள்ளது.