இந்தியாவின் சிறந்த சிறையாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா தேர்வு

பெங்களூரு : செப்டம்பர். 8 -இந்திய காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியக அதிகாரிகள் இந்தியா முழுவதும் உள்ள சிறைகளுக்கு சென்று சிறைகளின் நிலை, சுகாதாரம், பராமரிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து சிறந்த சிறைகளுக்கு பரிசுகள் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 6-வது அனைத்து இந்திய சிறைகளுக்கான சுகாதார போட்டி நடந்தது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 1,319 சிறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் இந்தியாவின் சிறந்த சிறையாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை தேர்வு செய்யப்பட்டது. மேலும் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு முதல் பரிசும், ஆந்திராவில் உள்ள மத்திய சிறைக்கு 2-வது பரிசும், தமிழ்நாடு மத்திய சிறைக்கு 3-வது பரிசும் கிடைத்து உள்ளது.