இந்தியாவின் தரமற்ற பவுலிங் : கவாஸ்கர் வருத்தம்

புதுடெல்லி : ஜூன். 13 – தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக பௌலர்களின் தரமற்ற விளையாட்டை குற்றஞ்சாட்டியுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் இந்த குழுவில் விக்கெட்டை எடுக்கும் பௌலர்கள் இல்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்து மிகவும் அவமானத்துக்கு உட்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் குழுவின் தற்போதைய சோகமான நிலையில் கவாஸ்கர் தன் கருத்தை தெரிவித்திருப்பது இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு புண்ணில் வேல் பாய்ந்ததாயுள்ளது . இது குறித்து கவாஸ்கர் கூறியிருப்பதாவது எதிராளியின் விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே போட்டியின் மீது அழுத்தம் கொண்டு வர முடியும்.. சுரேஷ் குமார் மட்டுமே விக்கெட்டுகளை வீழ்த்துவதில் சாமர்த்தியத்தை காட்டியுள்ளார். மற்ற எந்த பௌலர்களும் தங்கள் சாமர்த்தியத்தை காட்டவில்லை. முதல் பந்தயத்தில் 211 ரன்கள் எடுத்திருப்பினும் அந்த பந்தயத்தில் நாம் தோற்றிருப்பது பௌலிங்க் துறையில் நம் இயலாமையை காட்டுகிறது. தவிர கடக்கில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்தியா தங்களுக்கு சாதகமான விளையாட்டு மைதானத்திலும் நிதான கதியில் பௌலிங் செய்து 20 ஓவர்களில் வெறும் 148 ரன்களை எடுத்தது. இதுவே தென் ஆப்ரிக்கா 18.2 ஓவர்களில் சவாலை வென்று தற்போது 2-0 என வெற்றி விகிதத்தில் முன்னணியில் உள்ளது. இவ்வாறு சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.