இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 492 பேருக்கு கொரோனா

புதுடெல்லி, நவம்பர். 20 – இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 492 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 69 ஆயிரத்து 015 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 781 ஆக உள்ளது. அதேபோல், கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 31 ஆயிரத்து 952 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 489 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,30,574 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 219.86 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.