இந்தியாவில் கொரோனா மேலும் உயர்வு

People Crowded at Fancy Bazar market amid concerns over rising Covid cases on December 31, 2021 in Guwahati, Assam, India. The tally of Omicron COVID-19 variant cases in India has gone up over one thousand with maximum cases were reported from Delhi and Maharashtra. (Photo by David Talukdar/NurPhoto via Getty Images)

புதுடெல்லி, ஜூன், 23- இந்தியாவில் கடந்த 20-ந் தேதி 12 ஆயிரத்து 781 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் (21-ந் தேதி) இது அதிரடியாக 9 ஆயிரத்து 923 ஆக குறைந்தது. ஆனால் நேற்று (22-ந் தேதி) கொரோனா பாதிப்பு மீண்டும் 12 ஆயிரத்தைக் கடந்தது. இதன்படி நேற்று 12 ஆயிரத்து 249 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 13,313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13 ஆயிரத்து 313 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,33,44,958 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,24,941 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 10,972 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,27,36,027 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 83,990 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,96,62,11,973 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14,91,941 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது