
டெல்லி: நவம்பர் 5-
அர்ஜென்டினா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் முதல் 20 பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பாக ஜி20 நாடுகள் உள்ளன. ஜி20 நாடுகள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், கடந்த 23 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களின் சொத்துமதிப்பு 62 சதவீதமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ஜி 20 நாடுகள் என்பது உலகின் மிக முக்கியமான மிகப்பெரிய பொருளாதார பலம் கொண்ட நாடுகள் ஆகும். அர்ஜென்டினா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 20 நாடுகள் அமைப்பில் உள்ளன. இந்த அமைப்பு ஜி 20 நாடுகளில் உள்ள பல்வேறு விவகாரங்கள் குறித்து அறிக்கை வெளியிடும். குறிப்பாக ஆண்டுதோறும் ஒவ்வொரு உறுப்பினர் நாடுகள் கருப்பொருளை நிர்ணயித்து மாநாடு நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளன.
இந்தாண்டுக்கான தலைமைத்துவத்தை தென் ஆப்பிரிக்கா ஏற்று உள்ளது. இந்தாண்டுக்கான கருப்பொருளாக ‘ஒற்றுமை, சமத்துவம், நிலைத்தன்மை’ என்பது உள்ளது. இந்நிலையில் இந்தியா உட்பட உலக அளவில் நிலவும் அதிகபட்ச நிதி சமத்துவமின்மை குறித்து ஆய்வு செய்யும் ஜி20 தலைமையிலான அறிக்கை, கடந்த 23 ஆண்டுகளில் இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டியிருக்கிறது.. பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், உலகளாவிய சமத்துவமின்மை அவசர நிலையை எட்டியுள்ளதாக எச்சரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் காலநிலை முன்னேற்றத்துக்கு ஆபத்தாக தற்போதைய நிலை உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2000 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் உள்ள முதல் 1% பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்புப் பங்கு 62% அதிகரித்திருக்கிறது.














