இந்தியாவுக்குமேலும் ஒரு பதக்கம்

ஹாங்சு: செப்.30- ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா வெள்ளி வென்றது. இதனால், இதுவரை இந்தியா 8 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 34 பதக்கங்களை வென்று 4வது இடத்தில் உள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இதில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர்.
ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா இன்று(செப்.,30) வெள்ளி வென்றது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரப்ஜோத் சிங், திவ்யா இணை வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.
இதுவரை இந்தியா 8 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 34 பதக்கங்களை வென்று 4வது இடத்தில் உள்ளது.