இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

டோக்கியோ, செப்.4-
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


இறுதிபோட்டியில் இங்கிலாந்து வீரர் டேனியலை 21-14, 21-17 என்ற புள்ளிகள் கணக்கில் பிரமோத் வீழ்த்தினார். ஒடிசாவை சேர்ந்த 33 வயதாகும் பிரமோத் பகத் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று தந்துள்ளார்.
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள பதக்கங்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. பாரா ஒலிம்பிக்கில் 4 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 16 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.