இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான்


இஸ்லமபாத், ஏப். 27- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது உள்ளிட்ட சில முடிவுகளை இந்தியா மறு பரிசீலனை செய்தால், இந்தியாவுடன் பேச்சுவாரத்தைக்கு பாகிஸ்தான் அரசு தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரோஷி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் , “இந்தியா சில முடிவுகளை மறு பரிசீலனை செய்யும் பட்சத்தில் அந்நாட்டுஅன் பேச்சுவார்த்தை நடத்தி நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க பாகிஸ்தான் ஆர்வமாக உள்ளது. காஷ்மீர் விவகாரம், சியாச்சின், நீர் பிரச்சினை என வேறு சில பிரச்சினைகளும் இந்தியாவுடன் உள்ளது” என்றார்.
எனினும், பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு புகலிடம் அளிப்பதை நிறுத்தும் வரையில் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது இயலாத காரியம் என இந்தியா திட்டமிட்டு கூறி வருகிறது.