இந்தியா கூட்டணி அடுத்த ஆட்சி அமைக்கும்: மல்லிகார்ஜுன் கார்கே

பாட்னா, மே 27:
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை “ஜூதோன் கா சர்தார்” (பொய்களின் மாஸ்டர்) என்று அழைத்தார். அவர் வாக்காளர்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.
பிரதமர் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்களுக்கு இரண்டு கோடி வேலை வழங்குவதாகவும், சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டுவருவதாகவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதாகவும், நகரங்களை ஸ்மார்ட்டாக மாற்றுவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார். மாறாக அவர்கள் இந்த முறை ஆட்சியை பிடித்தால், அவர்கள் உங்களை ஒரு சர்வாதிகாரியின் கீழ் உள்ள அடிமைகளாக ஆக்குவார்கள்.
தேர்தல் முடிவுக்கு மத்தியில் அடுத்த அரசை இந்தியா கூட்டணி அமைக்கும். என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்று கூறிய கார்கே, மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிகள் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அளித்த‌ வாக்குறுதியளித்ததைச் நிறைவேற்றி உள்ளோம். மத்தியில் ஆட்சியை பிடித்தால் ரூ.72,000 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம் என்றார்.வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து கார்கே கூறுகையில், பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் மட்டும் ஒரே மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு சுமார் ஐந்து லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கினார். “நாடு முழுவதும் எத்தனை வேலைகள் கொடுக்க முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். “இந்த முறை மோடியோ அல்லது நிதீஷோ பதவிக்கு வரமாட்டார்கள். இந்தியா கூட்டணி அடுத்த அரசை அமைக்கும் என்றார் கார்கே. முதல்வர் நிதீஷ் குமாரை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சென்றதற்காக கடுமையாக சாடிய கார்கே, தேஜஸ்வியை எதிர்காலத்தில் மகா கூட்டணிக்கு மீண்டும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.