
புதுடெல்லி,செப்.13- அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஊட்டி அணி அமைத்து போட்டியிடும
இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தொகுதி பங்கீடு குறித்து இன்று முக்கிய ஆலோசனை நடத்தினர் டெல்லியில் உள்ள சரத் பாபா வீட்டில் இந்த ஆலோசனை நடந்தது. இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டு பிரச்சாரம் மேற்கொள்வது குறித்த வியூகம் இந்த ஆலோசனையில் வகுக்கப்பட்டது
வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்காக 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளனர். இந்தக் கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும், 3-வது கூட்டம் கடந்த 1-ம் தேதி மும்பையிலும் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டிரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட 28 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. இதில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இறுதி செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
மேலும், இந்தியா கூட்டணியில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும் இறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பாராளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டில் இன்று நடைபெற்றது
இக்கூட்டத்தில் தொகுதி பங்கீடு, கூட்டாக பிரசாரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இன்று மாலை தொடங்கி இரவு வரை நீடிக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இன்றைய கூட்டத்தில் அக்டோபர் 2-ம் தேதி வெளியிடப்படும் தொலைநோக்கு ஆவணத்தின் உள்ளடக்கம் குறித்து இறுதி செய்ய வாய்ப்பு உள்ளது.
இந்தக் கூட்டத்தில் கே.சி.வேணுகோபால், டி.ஆர்.பாலு, ஹேமந்த் சோரன், சஞ்சய் ராவத், தேஜஸ்வி யாதவ், ராகவ் சதா, ஜாவேத் அலிகான், ராஜீவ் ரஞ்சன் லாலன், சிங், உமர் அப்துல்லா, டி.ராஜா, மெகபூபா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
அமலாக்க இயக்குனரகம் பிறப்பித்த நோட்டீசுக்கு பதிலளிக்க கால அவகாசம் கேட்டுள்ளதால் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என திரிணாமுல் வட்டாரங்கள் தெரிவித்தன.
14 பேர் கொண்ட குழுவிற்கு சிபிஐ(எம்) தனது பெயரையும் பரிந்துரைக்கவில்லை. இன்றைய கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
செப்டம்பர் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் நடைபெறும் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் கமிட்டிக்கான நியமனம் குறித்து கட்சி முடிவு செய்யும் என்று மூத்த சிபிஐ(எம்) தலைவர் ஒருவர் தெரிவித்தார்.பிரச்சாரக் குழு மற்றும் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் ஆராய்ச்சி பணிக்குழுக்களின் கூட்டுக் கூட்டம் செப்டம்பர் 22 ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்க, பின்பற்ற வேண்டிய உத்திகள் குறித்து, இந்திய கூட்டணி, புது தில்லி, பெங்களூரு மற்றும் மும்பையில் ஏற்கனவே கூட்டங்களை நடத்தியது.
இந்திய கூட்டணி சின்னம் ஒருங்கிணைப்பாளர் பதவி உள்ளிட்ட மற்ற விவகாரங்கள் குறித்தும் கூட்டணி தலைவர்கள் விவாதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது