இந்தியா, பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதல்

பர்மிங்காம், ஜூலை 31- 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலிய மகளிர் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது.
இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனைகள் தீவிரமாக போராடுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.