இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி

மாமல்லபுரம், ஜூலை 30-
44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று ஆட்டம் மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றது இந்திய ஆடவர் அணியின் ‘ஏ ‘ பிரிவு அணி ஜிம்பாப்வேவை எதிர்கொண்டது .இதில் 4-0என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா ‘பி’ அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்த்து விளையாடியது.இதில் 4-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா ‘சி’ அணி தெற்கு சூடானை எதிர்கொண்டது .இதில் 4-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. முதல் சுற்றில் இந்திய மகளிர் ஏ அணி தஜிகிஸ்தானை எதிர்கொண்டது.இதில் 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா ‘பி’ அணி, வேல்ஸை எதிர்கொண்டது .இதில் 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது இந்தியா ‘சி’ அணி ,ஹாங்காங்கை எதிர்கொண்டது இதில் 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.