இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற நபர் கைது

ஸ்ரீநகர், நவம்பர் 22 –
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் ராம்கர் செக்டர் பகுதி சர்வதேச எல்லை வழியாக இந்திய எல்லைக்குள் நுழைந்த அந்த நபர் சர்வதேச எல்லையை கடந்த பிறகு, இந்திய எல்லை வேலிகளை தாண்ட முயற்சித்தார். எச்சரிக்கையை மீறி நுழைந்த அவரை சுட்டுக்கொலை செய்த எல்லை பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் சோதனை நடத்தி வருகின்றனர்.