இந்திய எல்லையில் ட்ரோன் அச்சுறுத்தல்

புதுடெல்லி, ஆக. 10: இந்திய எல்லையில் ட்ரோன் அச்சுறுத்தல். எதையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களால் கொண்டு செல்ல‌ பாகிஸ்தான் ட்ரோன்களைப் பயன்படுத்துகிறது. காரணம் ட்ரோன் தொழில்நுட்பம் மிகவும் மலிவு மற்றும் அணுகக்கூடியதாக மாறி வருகிறது. இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் எச்சரிக்கையாக‌, பாகிஸ்தான் தரப்பில் இருந்து வரும் ட்ரோன் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளனர் என்று பாதுகாப்பு படையின் உதவி கமாண்டன்ட் கவுரவ் சர்மா புதன்கிழமை தெரிவித்தார். “நாங்கள் எங்கள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ட்ரோன்கள் பற்றி மிகவும் திறமையாக பயிற்சி அளிக்கிறோம். எந்த விதமான சத்தம் கேட்டால் படை வீரர்கள் தங்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பார். எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து மேலும் விசாரணை நடத்தி அந்த முயற்சியை தவிடு பொடியாக்குவார்கள்” என்று ஷர்மா தெரிவித்தார். இது மிகவும் சவாலான பணியாகும்.ஏனெனில் ட்ரோன்களின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள்கள், ஆயுதங்கள் போன்ற எதையும் இங்கு எல்லைக்கு அனுப்ப முடியும் என்று அவர் மேலும் கூறினார்.இந்தியாவுடனான தனது மறைமுகப் போரை தீவிரப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் ஆளில்லா விமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்குள் போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் ஊடுருவுவது தொடர்பாக‌ தற்போது அதிக‌ கவனம் செலுத்தப் படுகிறது. இந்தியாவின் தேசிய நலன்களுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட மனிதர்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை இது தவிர்க்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தியாவின் மேற்குப் பகுதியில் பயங்கரவாத குழுக்கள் கடத்தலுக்கு ட்ரோன்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது என்று அறிக்கை கூறியுள்ளது. இந்த நடவடிக்கையை பாகிஸ்தானில் உள்ள அரசு ஆதரிக்கிறது என்பது இஸ்லாமாபாத் தொடர்ந்து நடத்தும் மறைமுகப் போர் உணர்த்துகிறது.