இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாக குழு

சென்னை, மார்ச் 16 – இ ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு, மாநிலக்குழு கூட்டம் மார்ச் 17,18 தேதிகளில் நடைபெறும் என கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்றுவிடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில நிர்வாகக் குழு மற்றும் மாநிலக் குழுக் கூட்டங்கள் மார்ச் 17, 18 தேதிகளில், சென்னையில் உள்ள மாநிலக் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, தேசிய செயலாளர் டாக்டர் கே. நாராயணா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் பணிகள், 39 தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர்கள் தேர்வு, நாகப்பட்டினம், திருப்பூர் மக்களவைத் தொகுதிகளின் தேர்தல் தொடர்பான பணிகள், தேர்தல் நிதி வசூல், மற்றும்உள்ள பணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.