இந்திய நாகரிகம், கலாச்சாரத்தை அழித்துவிட்டனர்: கவர்னர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

சென்னை: நவம்பர் 26-
காரல் மார்க்ஸை பின்​பற்​றிய​வர்​கள் இந்​திய நாகரி​கத்​தை​யும், கலாச்​சா​ரத்​தை​யும் அழித்​து​விட்​டனர் என்று, ஆளுநர் ஆர்​.என்​.ரவி குற்​றம்​சாட்​டி​னார். கல்​வெட்டு ஆராய்ச்​சி​யாள​ரும், வரலாற்று ஆசிரியரு​மான எம்.எல்​.​ராஜா எழு​திய, ‘கலி​யுகம் பற்​றிய கல்​வெட்​டு​கள்’ நூல் வெளி​யீட்டு விழா ஆளுநர் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது.இவ்​விழா​வில், ஆளுநர் ஆர்​.என்​.ரவி நூலை வெளி​யிட்டு பேசி​ய​தாவது: நான் படித்த காலத்​தில் பள்​ளி​யிலும் வீட்​டிலும், ஊரிலும் சொல்​லப்​பட்ட வரலாற்று நிகழ்​வு​கள் ஒவ்​வொன்​றும் வெவ்​வேறாக இருந்​தது. அவை உண்​மை​யில் இருந்து ரொம்ப தூரம் விலகி இருந்​ததை என்​னால் காண முடிந்​தது.
அந்​தக் காலக்​கட்​டத்​தில் ஆங்​கிலேயர்​களால் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் உயிருடன் இருந்​தனர். ஆனால், எதிர்​பா​ராத வித​மாக ஆங்​கிலேயர் ஆட்சி நன்​றாக இருந்​தது. அவர்​கள் சிறப்​பாக செயல்​பட்​டனர் என்று வரலாற்று புத்​தகங்​களில் எழு​தி​யுள்​ளனர்.சுதந்​திரத்​துக்​குப்பிறகு காரல் மார்க்ஸை பின்​பற்​றிய​வர்​கள் நமது நாகரி​கத்​தை​யும், கலாச்​சார வரலாற்​றை​யும் அழித்​து​விட்​டனர். ஆனால், இங்கு வெளி​யிடப்​பட்ட நூலின் ஆசிரியரைப் போன்ற வரலாற்று ஆசிரியர்​கள் நமது வரலாற்றை மீட்​டெடுக்க தொடர்ந்து முயற்சி செய்​கின்​றனர்.இந்​தியா தற்​போது விழித்​துக் கொண்​டிருக்​கிறது. கிராமப்​புறங்​களில் இன்​னும் கலி​யுகத்தை நம்​பு​கிறார்​கள். ஆனால், கல்​லூரி மாணவர்​கள் படிக்​கும் பாடப்​புத்​தகங்​களில் அது ஒரு புனை​வுக் கதை​யாகவே சித்​தரிக்​கப்​படு​கிறது.900-க்​கும் மேற்​பட்ட கல்​வெட்​டு​கள் நம் நாட்​டைத் தாண்​டி​யும், பல்​வேறு இடங்​களில் கிடைத்துள்​ளன. நாட்​டின் வரலாற்றை புரிந்து கொள்​வ​தில் இந்​நூல் முக்​கிய பங்கு வகிக்​கும். நம் வரலாறு குறித்து மாணவர்​களும் ஆய்​வில் ஈடுபட வேண்​டும்​ என்று கூறினார்​.