இந்திய நாட்டில் சர்வாதிகார ஆட்சி மல்லிகார்ஜுன கார்கே ஆவேசம்

பெங்களூர், பிப். 26- பாராளுமன்ற தேர்தல்களில் மக்கள் பி ஜே பிக்கு எதிராக உறுதியான முடிவு மேற்கொள்ள உள்ளனர் அரசியல் சாசனத்திற்கு எதிராக இருப்பதுடன் நாடு சர்வாதிகார ஆடிச்சியின் கையில் உள்ளது என அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன்னுடைய கவலை தெரிவித்துள்ளார். நகரின் அரண்மனை மைதானத்தில் சமூக நலத்துறை ஏற்பாடு செய்திருந்த irandu நாள் ‘அரசியல் சாசனம் மற்றும் தேசிய ஒற்றுமை ‘ மாநாட்டின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய கார்கே , சர்வாதிகாரிகள் கைகளில் நாடு சிக்கிக்கொண்டுள்ளது . பல நாடுகளில் மக்கள் ஜனநாயகம் நீடிக்கவில்லை. சர்வாதிகார ஆட்சி வேண்டுமா அல்லது அரசியல் சாசன விதிமுறைகலின்படி சமத்துவ தேவையா என கார்கே கேள்வி எழுப்பினார். இந்த மாநாட்டை அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்த விரும்புவதில்லை என கூறிய மல்லிகாரஹண கார்கே பிரதமர் நரேந்திர மோதி, பி ஜே பி , ஆர் எஸ் எஸ் ஆகிய இயக்கங்களை கடுமையாக தாக்கினார். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட வெளி மாநில எதிர் கட்சி தலைவர்களும் கார்காத்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர் . மோதிக்கு ஏழைகள் , மற்றும் பின்தங்கியோர் ரத்தம் சிந்துவது தெரியும் . தேச பணியை செய்வது எந்த அரசின் நோக்கமாக வேண்டும். ஆனால் மோதியோ தன்னுடைய நோக்கம் என்கிறார். நாடு சர்வாதிகார போக்கில் சென்றுகொண்டுள்ளது . என்பதே இதன் பொருள் இவ்வாறு மல்லிகார்ஞ்சுநாகார்கே பேசினார் . இதே மாநாட்டில்நேஷனல் கான்பெரன்ஸ் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பேசுகையில் மக்களுக்கு தேவையாக இருப்பது நல்ல மருத்துவமனைகள் , கல்வி முறை , சாலைகள் உட்பட அடிப்படை வசதிகள். மதச்சார்பு அரசியல் அல்ல. ஆனால இன்று மத சார்பு அரசியலால் நாடு சீரழிந்துகொண்டுள்ளது. என்றார் பின்னர் பேசிய சி பி ஐ (எம்) கட்சி தேசிய தலைமை செயலாளர் சீதாராம் யெச்சூரி இந்தியாவை ஹிந்துக்கள் தேசமாக மாற்ற முயற்சிகள் நடந்து varugiradhu. நாடு இப்போது வாழ்வா சாவா என்பதை நிர்ணயிக்கும் கட்டத்தில் உள்ளது. ஏழ்மை , பசி , நாடு முழுக்க அதிகரித்துள்ளது. என்றார். இந்த மாநாட்டில் பேசிய சி பி ஐ தலைமை செயலாளர் டி ராஜா நாடு மிகவும் கஷ்டமான நிலையில் சிக்கியுள்ளது. இதில் இருந்து விடுபட செயாவேண்டிய பணிகளின் போது கர்நாடகா அரசு மிக நல்ல நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அரசின் ஆட்சியில் ஆர் எஸ் எஸ் நேரடியாக தலையிடுகிறது . இதை பொருத்துகொண்டு சும்மாயிருக்கமுடியுமா ? மோதி தொழிலதிபர்களுக்கு ஆதரவாக உள்ளார். மோதி நல்ல ஆட்சியை கொடுத்திருந்தால் விவசாயிகள் ஏன் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய மாநில சமூக நல துறை அமைச்சர் ஹெச் சி மஹாதேவபா நாடு மற்றும் அரசியல் சாசனம் ஆபத்தில் உள்ளது. நல்லவர்கள் கைகளில் நாட்டின் ஆட்சி கிடைக்க வேண்டும் . பாராளுமன்ற தர்தலில் சரியானவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். என கோரிக்கை விடுத்தார். இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சி மாநில பொறுப்பாளர் ரணதீப் சிங்க் , சுர்ஜீவாளா , காங்கிரஸ் பிரமுகர் திக்விஜய் சிங்க் சல்மான் குர்ஷீத் , மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி , அமைச்சர்கள் ஹெச் கே பாட்டிலா , முனியப்பா , கே ஜெ ஜார்ஜ் , போஸ்ராஜ் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.