இந்திய பொருளாதாரம் 9.5% வளர்ச்சியடையும்: ஐ.எம்.எப் கணிப்புபுது

புதுடில்லி, அக். 13- நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் 9.5 சதவீத வளர்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்) நடப்பு ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து தனது கணிப்பை அறிக்கையாக வெளியிட்டுள்து. அதில், உலக பொருளாதாரம் நடப்பாண்டில் 5.9 சதவீதமும், அடுத்த நிதியாண்டில் 4.9 சதவீதமும் வளர்ச்சி அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா பெருந்தொற்றால் கடந்த நிதியாண்டில் 7.3 சதவீத சரிவை சந்தித்த இந்திய பொருளாதாரம், நடப்பு நிதியாண்டில் 9.5 சதவீத வளர்ச்சியை அடையும் எனக் கணித்துள்ளது. மேலும், அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 8.5 சதவீதமாக இருக்கும் எனவும் ஐ.எம்.எப் கணித்துள்ளது. பொருளாதார வல்லரசு நாடான சீனா நடப்பு நிதியாண்டில் 8 சதவீதமும், அடுத்த நிதி ஆண்டில் 5.6 சதவீதமும் பொருளாதார வளர்ச்சி அடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.