இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் பதவியேற்பு

வாஷிங்டன், ஜன. 9- அமெரிக்காவில் 5 லட்சம் சீக்கியர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஹூஸ்டன் பகுதியில் 20,000 சீக்கியர்கள் வாழ்கின்றனர்.
இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா சிங் அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதி ஆனார். கடந்த வெள்ளிக்கிழமை டெக்சாஸில் உள்ள ஹாரிஸ் கவுண்டி சிவில் கோர்ட்டின் நீதிபதியாக மோனிகா பதவியேற்றார். ஹூஸ்டனில் பிறந்து வளர்ந்த மோனிகா தற்போது தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் பெல்லாயரில் வசிக்கிறார். மோனிகாவின் தந்தை 1970-களின் தொடக்கத்தில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். 20 ஆண்டுகளாக வக்கீலாக இருந்த மோனிகா உள்ளூர், மாநில மற்றும் தேசிய அளவில் பல சிவில் உரிமை அமைப்புகளில் ஈடுபட்டுள்ளார்.