இந்திய விளையாட்டு வீரர்கள் குழு டோக்கியோ வந்தது

டோக்கியோ, ஜூலை.18- இந்திய விளையாட்டு வீரர்கள் 54 பேர் உட்பட 88 பேர் கொண்ட குழு டோக்கியோ சர்வதேச விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்துள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வில்வித்தை, பூப்பந்து, ஹாக்கி, ஜூடோ, நீச்சல், பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட 8 விளையாட்டு பிரிவுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் சனிக்கிழமை இரவு டோக்கியோவுக்கு புறப்பட்டனர்.
ஒலிம்பிக் போட்டிகள் இந்த மாதம் 23 முதல் அதிகாரப்பூர்வமாக துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.