இந்திய வீராங்கனை உலக சாதனை

பாரிஸ்: ஜூன் 8
பிரான்சில் நடைபெற்ற சர்வதேச பாரா துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகரா தங்கப்பதக்கம் வென்று மீண்டும் சாதனை படைத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது சக்கர நாற்காலி வீராங்கனையான அவனி லெகரா, 10 மீட்டர் ஏர் ரைஃப்பிள் பிரிவில் 250.6 புள்ளிகளை கைப்பற்றி தனது சொந்த சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். முன்னதாக 249.6 என்கிற புள்ளிகளை பெற்று சாதனை படைத்திருந்த அவர், தற்போது 250.6 புள்ளிகள் பெற்று அவரது சாதனையை முறியடித்திருக்கிறார். இரண்டாம் இடத்தை போலந்தின் எமிலியாவும், 3ம் இடத்தை ஸ்வீடன் நாட்டின் அன்னா நார்மனும் கைப்பற்றினர்.பிரான்ஸ் சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளதன் மூலம் இந்தியாவின் அவனி லெகரா பாரிசில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க நேரடியாக தகுதி பெற்றுள்ளார்.
தனது சொந்த சாதனையை முறியடித்து சர்வதேச பாரா துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அவனி லெகராவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.